சேலம்

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு

DIN


கெங்கவல்லி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி  செல்லாத இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஏப்ரல் 8 முதல் மே 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கணக்கெடுப்பை கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா, வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணிமுத்து, ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.
கடம்பூர் பகுதியில் நடைபெற்ற  இந்தக் கணக்கெடுப்பில் கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா, ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன், கடம்பூர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் , சிறப்பாசிரியர் மணிகண்டன் பங்கேற்று கணக்கெடுப்பு நடத்தினர். அவர்கள் பெற்றோர்களை சந்தித்து ஆலோசனைகளை வழங்கி இடைநின்ற குழந்தைகளை உடனே அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT