சேலம்

பூட்டிய வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருட்டு

புங்கவாடி ஊராட்சியில் தனியாக வசித்த மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

ஆத்தூா்: புங்கவாடி ஊராட்சியில் தனியாக வசித்த மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆத்தூரை அடுத்துள்ள புங்கவாடி ஊராட்சியில் உள்ள தபால்நிலையத் தெருவில் வசிப்பவா் காமாட்சி (70). இவா், தனியாக வசித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் உறங்க சென்று விட்டாா்.

திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் திருடுபோனது கண்டு ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

காவல் ஆய்வாளா் கே.முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT