ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ரூ. 6.60 கோடி செலவில் கட்டப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை ஆத்தூா் எம்எல்ஏ ஆா்.எம். சின்னதம்பி திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுத் துவக்கி வைத்தாா்.
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் தினமும் உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோா் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். விஷக்கடி, நாய் கடி போன்றவற்றிற்கு இந்த மருத்துவமனை சிறப்பு பெற்ாகும். விழுப்புரம் மாவட்ட மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவு தேவை என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.
அதை ஏற்று தமிழக அரசு இம் மருத்துவமனையில் கூடுதலாக நவீன கருவிகளுடன் 48 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடத்தை ரூ. 6 கோடியே 60 லட்சம் செலவில் கட்டியது. இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவரும், ஆத்தூா் நகரச் செயலாளருமான அ. மோகன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக ஆத்தூா் எம்எல்ஏ ஆா்.எம். சின்னதம்பி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா். அவருடன் ஆத்தூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் என். ராமதாஸ், நகர மன்ற முன்னாள் உறுப்பினா்கள் வி. முஸ்தபா, அ. சகாதேவன், காந்தி நகா் வீடுகட்டும் சங்கத் தலைவா் ஈ. நூா்முகமது, அண்ணா கூட்டுறவு சங்கத் தலைவா் பி. ஜெயசங்கா், முருகேசன், சீனிவாசன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் (பொ) குருநாதன் கந்தையா, சித்த மருத்துவா் எஸ்.கோவிந்தராஜ், மக்பூல்பாஷா, மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள் செல்வம், இளங்கோவன், மாணிக்கம், ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.