முதியவர் கொலை: ஆத்தூரில் இருவர் கைது
முதியவர் கொலை வழக்கில் ஆத்தூரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதியவர் கொலை வழக்கில் ஆத்தூரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கல்பகனூர் பகுதியில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி(74) என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமகிரிப்பேட்டையில் இருந்து புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து நாமகிரிப்பைட்டை காவல் நிலையத்தில் சுப்ரமணியத்தின் உறவினர்கள் காணாமல் போனது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க- ஐபிஎல்: முதல்முறையாகக் குறைந்த மேக்ஸ்வெல் சம்பளம்
புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிலத்தை விற்க சென்றபோது வாங்க வந்தவர்களால் ஏதோ பிரச்னை இருந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீஸார் ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்(27), அறிவழகன்(25) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
புதைக்கப்பட்ட இடத்தை காண்பிக்கிறார் ராமதாஸ்.
அதில் சுப்ரமணியத்தை கொலை செய்து புதைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம் தலைமையில் மருத்துவக்குழுவினர் நேரில் சென்று புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.