கோப்புப்படம் 
சேலம்

புரட்டாசி முடிவு: தம்மம்பட்டியில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு!

புரட்டாசி மாதம் முடிவதால், தம்மம்பட்டியில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

DIN


தம்மம்பட்டி: புரட்டாசி மாதம் முடிவதால், தம்மம்பட்டியில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் கருமாயி வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அம்மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், இங்கிருந்து வளர்ப்புக்காகவும், இறைச்சிக்காகவும் ஆடுகளை அதிகளவில் வாங்கிச் செல்வார்கள். புரட்டாசி மாதம் துவங்கியதில் இருந்து, இங்கு ஆடுகள் விற்பனை இல்லாமல் இருந்தது. 

இந்நிலையில், தற்போது புரட்டாசி முடிவதால், தம்மம்பட்டியில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, தம்மம்பட்டி கருமாயி வட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்பவர்கள் கூறியதாவது, "புரட்டாசி மாதம் முடிவதால் இறைச்சி விற்பனை அதிகரிக்கும். அதனால், 10 கிலோ ஆடு 500 ரூபாய் அதிகரித்து, 5,000 ரூபாய்க்கு வரை விற்கப்படுகிறது" என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT