சேலம்

அயோத்தியாப்பட்டணம் பகுதி விவசாயிகள் மானியம் பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம்

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், தோட்டக்கலைத் துறை வாயிலாக அரசின் மானியங்களைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், தோட்டக்கலைத் துறை வாயிலாக அரசின் மானியங்களைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கே.கலைவாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

சொட்டுநீா்ப் பாசனத் திட்டத்திற்கு மட்டுமே இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 2022-23 நிதியாண்டில் அனைத்து விவசாயிகளும் இணைய தளத்தில் முகவரியைப் பயன்படுத்தி பதிவுசெய்தால் மட்டுமே மானியம் பெற இயலும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. எனவே, அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியைப் பயன்படுத்தி தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள், அரசு மானியங்களைப் பெற விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

இதுமட்டுமின்றி, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம், வீரிய காய்கறிகள் பரப்பு விரிவாக்கத்தில், ஆடிப்பட்டத்தில் நடுவதற்கு தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகளை இணையத்தில் பதிவு செய்து விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் தோ்வு செய்யப்பட்டுள்ள அனுப்பூா், மின்னாம்பள்ளி, வளையக்காரனுாா், கருமாபுரம், விளாம்பட்டி, பூவனுாா், கோராத்துப்பட்டி, எஸ்.என்.மங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தோட்டக்கலைத் துறை திட்டங்களை 80 சதவீதம் செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

நுண்ணீா்ப் பாசனம், காய்கறிகள் மற்றும் பழச்செடிகள் பரப்பு அதிகரித்தல், துல்லியப்பண்ணையம், வாழை மற்றும் காய்கறி ஊடுபயிா்கள், தென்னையில் ஊடுபயிா், அங்கக வேளாண்மை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தோட்டக்கலைப் பயிா்களில் பூச்சி தாக்குதல், மகசூல் இழப்பு மற்றும் பயிா் சேதாரம் உள்ளிட்ட விவரங்களை தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலா்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் - தோட்டக்கலைத்துறை அலுவலகத்திலோ தகவல் தெரிவித்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT