அதிமுகவினர் மௌன ஊர்வலம். சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மௌன ஊர்வலம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர். 
சேலம்

ஜெயலலிதா நினைவு நாள்: சேலத்தில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்

ஆத்தூரில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

DIN

ஆத்தூரில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மௌன ஊர்வலம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. 

ஆத்தூர் நகர கழக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி தாயுமானவர் தெரு வழியாக சென்று கோட்டையில் உள்ள ஜெயலலிதாவின் திரவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

இதில் ஆத்தூர் நகர செயலாளர் அ.மோகன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.ஜெயசங்கரன், அ.நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவர் ஏ.டி.அர்ச்சுணன், முன்னாள் சட்டப்பேரவ உறுப்பினர்கள் எஸ.மாதேஸ்வரன், ஆர்.எம்.சின்னதம்பி, அ.மருதமுத்து, ஒன்றிய செயலாளர்கள் வி.பி.சேகர், கே.பி.முருகேசன் ரமேஷ், நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT