சேலம்

கோனேரிப்பட்டியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

DIN

தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டி பகுதியிலுள்ள சுவேத நதியின் வழியாக பெல்ஜியம் காலனி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனா். மழைக் காலங்களில் சுவேத நதியின் குறுக்கே செல்வது பெரும் சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு பாலம் அமைக்க தமிழக அரசிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் போதுமான நிதிஒதுக்கீடு செய்து பாலம் கட்டித் தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT