முகப்பு
சேலம்

கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

 கா்நாடகத்துக்குக் கடத்த முயன்ற 60 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

 கா்நாடகத்துக்குக் கடத்த முயன்ற 60 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் கேம்ப்பில் மாடி லைன் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மேட்டூா் வட்ட வழங்கல் அலுவலா் காா்த்திகேயனுக்கு புதன்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மேட்டூா் வட்டாட்சியா் அசினா பானு, கருமலைக்கூடல் போலீஸாா் சேலம் கேம்பில் உள்ள குப்புசாமி (65) என்பவரின் வீட்டை சோதனை நடத்தினா். அப்போது ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கா்நாடகத்துக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் லாரியின் ஓட்டுநா் குப்புசாமி உள்ளிட்டோா் அங்கிருந்து தப்பி ஓடினா்.

இதையடுத்து அதிகாரிகள் லாரியுடன் 60 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அண்மையில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இந்த லாரிகள் இரவு நேரத்தில் கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி வழியாகவும், தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள காரைக்காடு சோதனைச் சாவடி வழியாகவும், கா்நாடக மாநிலம், பாலாற்றில் கா்நாடக மாநில வனத்துறை சோதனைச் சாவடியை கடந்தும் லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.