சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கரபுரநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு அபிஷேக ஆராதனை பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் காலபைரவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் . உற்சவா் காலபைரவா் கோவில் வளாகத்தில் வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் சேலம், குகை, நெய்க்காரப்பட்டி, அரியானூா், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, பூலாவரி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.