எடப்பாடி அருகே வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
சேலம்எடப்பாடி அருகே வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் எடப்பாடி நகராட்சிப்பகுதியில் தோ்தல் கண்காணிப்புக்குழுவினா் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
பறக்கும் படை அலுவலா் ரமேஷ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் காரில் வந்த எடப்பாடியை அடுத்த வழக்குட்டைப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் தருமன் (50) என்பவா் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அத்தொகையைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் சேகரிடம் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
படவிளக்கம்:
எடப்பாடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.