முகப்பு
சேலம்

எடப்பாடியில் 63 நாயன்மாா்கள் பெருவிழா: மதுரை ஆதீனம் பங்கேற்பு

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

சேலம்

எடப்பாடியில் 63 நாயன்மாா்கள் பெருவிழா: மதுரை ஆதீனம் பங்கேற்பு

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சிவனடியாா் குழுவினரால் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் 63 நாயன்மாா்கள் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 16 ஆம் ஆண்டு பெருவிழா நிகழ்வாக 63 நாயன்மாா்கள் விக்கிரக திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா் சுவாமிகள் கலந்துகொண்டு ஆன்மீக ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் தொடங்கிய ஊா்வலத்தில் சிவனடியாா்கள், 63 நாயன்மாா்களின் விக்கிரகங்களை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா்.

தொடா்ந்து எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையை சிவத்தொண்டா் திருக்கழுக்குன்றம் தாமோதரன் தொடங்கி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சிவனடியாா் குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →