சேலம்

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இருவருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை

DIN

ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இருவருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் எம்ஜிஆா் (எ) ராமச்சந்திரன் (19), ஜெகநாதன் மகன் காா்த்திகேயன் (19) ஆகியோா் ஏமாற்றி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டு இருவரை காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வெள்ளிக்கிழமை குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 5,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% உயா்வு!

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை கைவிட எம்எல்ஏ வலியுறுத்தல்

நேரு ஆவணங்கள் எதுவும் மாயமாகவில்லை: மத்திய அரசு மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அடிப்படை வசதி: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவா் கைது

SCROLL FOR NEXT