முகப்பு
சேலம்

சேலத்தில் ரௌடி வெட்டிக் கொலை!

சேலத்தில் பிரபல ரௌடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:26 AM
பகிர்:

சேலத்தில் பிரபல ரௌடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி காட்டூர் ஆனந்தன். இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் காட்டூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தன் இரவு 11 மணிக்கு அங்கிருந்து திரும்பியுள்ளனர்.

அப்போது காட்டூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்த போது வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆனந்தன் மற்றும் பிரபாகரனை ஆயுதங்களால் தாக்கி தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து கார் மூலம் தப்பிச் சென்றுள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisement

இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மாநகர காவல் துணை ஆணையாளர், லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த பிரபாகரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பிரபல ரௌடி காட்டூர் ஆனந்தன் மீது கொலை வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில் ரௌடி ஆனந்தன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்யப்பட்ட கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments