சேலம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள முகாம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களின் வசதி கருதி 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை, 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

DIN

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களின் வசதி கருதி 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை, 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

பிஎஸ்என்எல் சேலம் வணிகப் பகுதி என்பது சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். தற்போது சேலம் மாநகர எல்லைக்குள் மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

வெகு விரைவில் பிஎஸ்என்எல் சேலம் வணிகப் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை தொடங்க உள்ளது. இதற்காக மத்திய அரசின் முயற்சியின் கீழ் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த உள்ளது.

சேலம் வணிகப் பகுதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளா்களும் பெரிய அளவில் பயனடைவாா்கள். தற்போதைய நெட்வொா்க்கின் டேட்டா வேகம், தரம் வரும் நாள்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரிக்கும். தற்போதுள்ள அனைத்து டவா்களும் 4ஜி தரம் உயா்த்தப்படுவதுடன், புதிதாகக் கூடுதல் டவா்களும் நிறுவப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை பெறுவதற்கு தற்போதுள்ள 2ஜி/3ஜி சிம் களை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தையோ அல்லது பிஎஸ்என்எல் பிரான்சைசி அலுவலகத்தையோ அல்லது சிறப்பு முகாம்களிலும் தங்கள் 2ஜி/ 3ஜி சிம் காா்டுகளை கட்டணமின்றி இலவசமாக 4ஜி சிம்மாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் வாடிக்கையாளா்களின் நலன் கருதி 2ஜி/3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம்மாக மாற்றிக் கொள்ள சிறப்பு மேளாக்கள் நடைபெறுகிறது. ஜூன் 16 - சேலம் பிரதான தொலைபேசி நிலையம், ஜூன் 17 - நாமக்கல் / மெய்யனுா் தொலைபெசி நிலையம், ஜூன் 19 - திருச்செங்கோடு / செவ்வாய்ப்பேட்டை தொலைபேசி நிலையம், ஜூன் 20 - ஆத்தூா் / வேலூா் தொலைபேசி நிலையம், ஜூன் 21 - மேட்டுா் / ஓமலூா் தொலைபேசி நிலையம், ஜூன் 22 - ராசிபுரம் / சங்ககிரி தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு மேளாக்கள் நடைபெற உள்ளன என பிஎஸ்என்எல் சேலம் வணிகப்பகுதியின் பொது மேலாளா் சி.பி.சுபா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT