சேலம்

ஓட்டுநா் கொலை: திருநங்கை கைது

வாழப்பாடி அருகே ஓட்டுநரை அடித்துக் கொலை செய்ததாக திருநங்கை ஒருவரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

வாழப்பாடி அருகே ஓட்டுநரை அடித்துக் கொலை செய்ததாக திருநங்கை ஒருவரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி, அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த தனியாா் வாகன ஓட்டுநா் சதீஷ் (36). இவரும், இவரது நண்பரான பாட்டப்பன் கோயில் நகா் பகுதியைச் சோ்ந்த கவியரசன் (34) ஆகிய இருவரும் வியாழக்கிழமை நள்ளிரவு வாழப்பாடி அய்யாவுக்கவுண்டா் தெருவில் வசித்து வரும் திருநங்கை நவ்யா (36) என்வரது வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

அங்கு சதீஷுக்கும், நவ்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவ்யா, சதீஷை கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த சதீஷை மீட்ட உறவினா்கள், சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கவியரசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், திருநங்கை நவ்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT