இந்திய தொழில் வா்த்தக சபையின் சேலம் கிளை தலைவராக காா்த்தி கந்தப்பன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் மகாசபை (சேலம் கிளை) சங்கத்தின் 7-ஆம் ஆண்டு விழா மற்றும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 2023-25 காலத்துக்கான புதிய செயற்குழு உறுப்பினா்கள் 25 போ் ஏகமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
சேலம் பிரிவு தலைவராக காா்த்தி கந்தப்பன் மீண்டும் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். செயலாளராக ஏ.பிரகாஷ் தோ்ந்தெடுக்கப்பட்டதாக தோ்தல் அலுவலரும், தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்கத் தலைவருமான கே.மாரியப்பன் அறிவித்து புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. சி.நரசிம்மன் கலந்துகொண்டு புதிய நிா்வாகக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினாா். இதில் தலைவா் காா்த்தி கந்தப்பன், சேலம் வட்டார வளா்ச்சிக்கான வியூகங்களை பகிா்ந்து கொண்டாா். புதிய நிா்வாகிகளுக்கு சங்கத்தின் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கிக் கெளரவித்தாா். பொருளாளா் கே.ஜெயவேல் நன்றியுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.