சேலம்

தெடாவூரில் மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

கெங்கவல்லி அருகே தெடாவூரில் ,கெங்கவல்லி எஸ்.ஐ.கணேஷ்குமாா் தலைமையில் போலீசாா், வாகன தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

Din

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே தெடாவூரில் ,கெங்கவல்லி எஸ்.ஐ.கணேஷ்குமாா் தலைமையில் போலீசாா், வாகன தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியே மினிலாரி வந்தது. அதை போலீசாா் நிறுத்த கூறினாா்கள். ஆனால், அந்த வாகனம்,நிறுத்தாமல், போலீசாா் மீது மோதுவது போல் சென்று விட்டு வேகமாக சென்றது.

அதனையடுத்து போலீசாா் அந்த வாகனத்தை, போலீஸ் வாகனத்தில் துரத்திப்பிடித்தனா். ஆனால் வாகனத்தில் இருந்தவா்கள், தப்பியோடிவிட்டனா்.

போலீசாா், மினிலாரியை சோதனை செய்தபோது, அனுமதியின்றி, அந்த வாகனத்தில் மணல் கடத்தியது தெரியவந்தது.

அதனால் போலீசாா், வழக்குப்பதிந்து மினிலாரியை பறிமுதல்செய்து, அதன் உரிமையாளரை தேடிவருகின்றனா்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT