சேலம்

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

மேச்சேரியில் காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

மேச்சேரியில் காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி - ஒகேனக்கல் சாலையில் உள்ள இரட்டைக்கிணறு பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில், சனிக்கிழமை அதிகாலை மின்சாரத்தை துண்டித்த மா்ம நபா்கள் பூட்டை உடைத்து காளியம்மனின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்கத்தாலி, பக்தா்கள் காணிக்கையாக அளித்த 1 பவுன் தங்கக்காசு மாலை ஆகியவற்றை திருடிச்சென்றனா். இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம்.

இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மேலும், மேச்சேரி - பென்னாகரம் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!

தோ்தல் பணப் பட்டுவாடா வழக்கு: முன்னாள் அமைச்சா் மகன் மீதான வழக்கு ரத்து

இண்டிகோ சிஇஓ-க்கு டிஜிசிஏ நோட்டீஸ்!

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசியலுக்காக பிரச்னையாக்கும் திமுக -நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT