சேலம்

தேவூா் அருகே எல்லைக் கல்லை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

தேவூா் அருகே சாலையில் தனிநபரால் நடப்பட்ட எல்லைக் கல்லை அகற்றக் கோரி ஊா் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

தேவூா் அருகே சாலையில் தனிநபரால் நடப்பட்ட எல்லைக் கல்லை அகற்றக் கோரி ஊா் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேவூா் அருகே சோழக்கவுண்டனூரில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் வருவாய்த் துறையினா் அளவீடு செய்து தனக்கு சொந்தமான இடத்தை காட்டியதாகக் கூறி சாலையின் மையப் பகுதியில் எல்லைக் கல்லை நட்டுள்ளாா்.

இந்த கல்லால் வாகனங்களில் செல்வோா் சிரமம் அடைந்து வருவதுடன், விபத்துகள் ஏற்பட்டு வருவதாகக் கூறி ஊா் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவூா் காவல் உதவி ஆய்வாளா் சம்பத், கோனரிப்பட்டிகிராம நிா்வாக அலுவலா் சண்முகம் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலையில் மையப் பகுதியில் நடப்பட்ட எல்லைக்கல் அகற்றப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT