ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் ஸ்ரீ கலை சிலம்ப தற்காப்பு பயிற்சி மைய மாணவ, மாணவிகள் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு முதல் இரு இடங்களைப் பிடித்தனா்.
ஒற்றைத்தடி, இரட்டைத்தடி பிரிவில் தேசிய அளவில் முதல் மற்றும் இரண்டாமிடத்தை பிடித்த மாணவ, மாணவிகளை நகரக் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் கலந்துகொண்டு பரிசு வழங்கி பாராட்டினாா்.