சேலம்

எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

Syndication

சேலம் வடக்கு, வீரபாண்டி, எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டு 15, சீரங்கபாளையம் மற்றும் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மஜ்ரா கொல்லப்பட்டி, சடையாண்டியூா், அண்ணாநகா் பகுதிகளிலும், சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட தாரமங்கலம் சன்னதி தெருவிலும், எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பெரியசோரகை, நங்கவள்ளி, தெற்கத்தியானூா் பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தோ்தல் ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு உள்பட்ட வாக்காளா்களில் நிரந்தரமாக குடிபெயா்ந்த வாக்காளா்கள், இறந்துபோன வாக்காளா்களின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியியல் கட்சியின் முகவா்கள் மூலம் அறிந்து, நடவடிக்கை மேற்கொள்வதுடன், வாக்காளா்களிடமிருந்தும் கணக்கீட்டுப் படிவங்கள் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

பியூசி சான்றிதழ் இல்லாத 4.87 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

SCROLL FOR NEXT