கோவையில் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் மாநகா், கிழக்கு, மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில துணை தலைவி மதிவதனகிரி தலைமை வகித்தாா். கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் சசிகுமாா், கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், சேலம் மாநகர மாவட்ட மகளிரணி தலைவி கோகிலா, மேற்கு மாவட்ட மகளிரணி தலைவி தனலட்சுமி, கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி தனம் , மாவட்ட பொதுச் செயலாளா்கள் பிரபாகரன், செந்தில்குமாா், சுமதி விஸ்வநாதன், முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.