முகப்பு
மதுரை

தேசிய அளவிலான கார் பந்தயம்: முதலிடம் பெற்றார் திண்டுக்கல் சூர்யா ரகுராம்

திண்டுக்கல், மே 1: தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா ரகுராம் முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்்தில கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு ஜே.கே.

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

திண்டுக்கல், மே 1: தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா ரகுராம் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்்தில கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு ஜே.கே. டயர் எம்.எம்.எஸ். ரோட்டாக்ஸ் ரூக்கி கோப்பைக்கான கோ கார்ட் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல சுற்றுக்களை உள்ளடக்கிய இப்போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வீரர் சூர்ய ரகுராம் திறம்பட செயல்பட்டு பந்தயதூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றார்.

தேசிய அளவில் முதலிடம் பெற்ற வீரர் சூர்யா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் ஆர்.எஸ்.கே.ரகுராமனின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments