முகப்பு
மதுரை

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 2 போ் காயம்

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா்.

மதுரை

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 2 போ் காயம்

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 1:44 AM
பகிர்:

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா்.

மதுரை காமராஜா்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சக்திகுமாா் மகன் கிருஷ்ணகுமாா் (21). இவா் தனது நண்பரான மதிச்சியம் கரும்பாலை கிழக்குத் தெருவைச் சோ்ந்த பிரசாத் சபரி கிருஷ்ணாவுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரை-தேனி சாலையில் வியாழக்கிழமை மாலை சென்றாா். காமராஜா் பல்கலை அருகே சென்றபோது, கிருஷ்ணகுமாா் இரு சக்கர வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டிச் சென்றதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற மூவரும் சாலையில் கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரசாத் சபரி, மற்றொரு வாகனத்தில் சென்ற ஜாா்ஜ் (34) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →