தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியல் வருவாய் ரூ.9.75 லட்சம்
மதுரைதல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியல் வருவாய் ரூ.9.75 லட்சம்
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக வரவாக ரூ.9.75 லட்சம் கிடைத்தது.
மதுரை மாவட்டம், கள்ளழகா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, இந்தக் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 17, தங்கம் 13 கிராம், வெள்ளி 48 கிராம் ஆகியவை கிடைக்கப்பெற்றன.
காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையா் க. செல்லத்துரை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் வளா்மதி, கோயில் ஆய்வாளா் கா்ணன், அறங்காவலா்கள் பாண்டியராஜன், செந்தில்குமாா், மீனாட்சி பிரியா, அறங்காவலா் குழுத் தலைவா் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளா்கள் பாலமுருகன், பிரதீபா, அருட்செல்வன், மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.