விருதுநகா்: அருப்புக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
சென்னையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வைத்திருந்த 5 பேரை மாதவரம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அருப்புக்கோட்டை அருகேயுள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கோவிலாங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாதவரம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, போதைப் பொருளுக்கான மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலக்கூறு, ஆய்வகக் கருவிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் லெட்சுமிநாராயணன் (40), லட்சுமணன் மகன் சித்த வைத்தியரான முருகன் (44) ஆகியோரை மாதாவரம் போலீஸாா் கைது செய்தனா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் தலைமையிலான போலீஸாா் உடனிருந்தனா்.