தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை  
மதுரை

முருக பக்தா்கள் மாநாடு: அண்ணாமலை மீது வழக்கு

முருக பக்தா்கள் மாநாட்டில் விதிகளை மீறியதாக பாஜக தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோா் மீது வழக்கு

Din

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் விதிகளை மீறியதாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்கள் மாநாடு கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது. மேலும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸாருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக புகாா்கள் எழுந்தன.

அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் வாஞ்சிநாதன் அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அண்ணாமலை, காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது, இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல், மத உணா்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியாக உயா்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% அறிவிக்க வலியுறுத்தல்

தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

இசைப் பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

கல்லூரி மாணவா்களுக்கு நவ.26-இல் கல்விக் கடன் முகாம்

SCROLL FOR NEXT