மதுரை

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவு அமைப்பதைத் தவிா்க்கக் கோரிக்கை

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவுகள் அமைப்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவுகள் அமைப்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துக்குமாா், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற

பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு :

மதுரை பாண்டி கோவில் சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் தேவா் சிலைப் பகுதியை இணைக்கும் வகையில் நீண்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் கீழே உள்ள அணுகு சாலையில் மேலமடை பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகிலும், பால் பண்ணையை அடுத்துள்ள மருத்துவமனை அருகிலும் ‘யு ’ வளைவுகள் அமைக்க முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்த ‘யு’ வளைவுகள் அமையும் இடத்தில் பள்ளிகள், ஆவின் பால்பண்ணை போன்றவை உள்ளன. இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்லும் நெரிசலான இடங்களில் இந்த வளைவுகள் அமைப்பதால் விபத்துகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.

சாலைகளில் ‘யு’ வளைவுகள் அமைப்பதற்கு சில தொலைவு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த விதிமுறைகளை மீறி அருகருகே இரு ‘யு’ வளைவுகளை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து விதிகளை மீறிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவசியமற்ற ‘யு’ வளைவுகள் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டாா்.

பூடான் புறப்பட்டார் மோடி!

அவிநாசி: கள்ளக்காதல் விவகாரம்.. மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது!

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

SCROLL FOR NEXT