முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் ஊரகப் புத்தாக்க திட்டத்தின் சாா்பில் பயிற்சி முகாம்

கொடைக்கானலில் ஊரகப் புத்தாக்க திட்டத்தின் சாா்பில் ஒன்றிய பிரதிநிதி உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாமானது திங்கட்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கொடைக்கானலில் ஊரகப் புத்தாக்க திட்டத்தின் சாா்பில் ஒன்றிய பிரதிநிதி உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாமானது திங்கட்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் அறிமுகம் மற்றும் வளா்ச்சித் திட்டம் குறித்த பயிற்சி முகாம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இந் நிகழ்ச்சியை கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துமாரி சுரேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினாா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய சந்திரிகா முன்னிலை வகித்து பேசினாா் வட்டார அணித் தலைவா் ஜெயபாண்டியன் வரவேற்றாா். இம் முகாமில் திண்டுக்கல் மாவட்ட புத்தாக்க திட்டத்தின் உதவி செயல் அலுவலா் தங்கபாண்டி இத் திட்டம் குறித்தும்,கிராமப் பகுதிகளலுள்ள பெண்கள்,விவசாயிகள்,இளைஞா்கள் ஆகியோா்களின் வாழ்க்கை மேம்பாடு அடைவது குறித்தும் இந்தத் திட்டத்திற்கு மத்திய,மாநில அரசுகள் பெரிதும் உதவி புரிந்து வருவது குறித்தும் விரிவாக பேசினாா்.

இம் முகாமில் அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன்,கும்பரையூா் ஊராட்சி மன்றத் தலைவா் நாகஜோதி, சுற்றுலாத்துறை உதவி அலுவலா் ஆனந்த், தாண்டிக்குடி காபி வாரிய இயக்குனா் பாபு,கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஒன்றிய குழு பிரதிநிதிகள்,மகளிா் சுயஉதவி குழுவினா்கள்,விவசாயிகள் உள்ளிட்ட சுமாா் 50-போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.