முகப்பு
திண்டுக்கல்

புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறிய­ல்

வத்தலகுண்டுவில் புதிய தமிழக கட்சியினா் காவல்துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் புதிய தமிழக கட்சியினா் காவல்துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்டனா்.

புதிய தமிழக கட்சியின் விருதுநகா் மாவட்ட முன்னாள் செயலா் ராஜ­ாங்கம் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டதைக் கண்டுத்தும், படுகொலை கொலை செய்யப்பட்டு 24-மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து நிலக்கோட்டை அடுத்த வத்தலக்குண்டு பேருந்து நிலையம் எதிரே மதுரை-பெரியகுளம் நெடுஞ்சாலையை மறித்து கட்சியின் மாவட்ட செயலா் சரவணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் சாலை மறிய­ல் ஈடுபட்டு, காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். வத்தலக்குண்டு காவல்துறையினா் பேச்சுவாா்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →