முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் ஆயுதமேந்திய போலீஸாா் பாதுகாப்பு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுதந்திரதினத்தையொட்டி தங்கக் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
சுதந்திர தினத்தையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள தங்கக் கோபுரம் பகுதியில் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
பகிர்:

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுதந்திரதினத்தையொட்டி தங்கக் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவீதி, சன்னிதி வீதி, மலைக்கோயில் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகின்றன. கோயிலில் நாள்தோறும் நடைபெறும் ஆறுகால பூஜைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சுதந்திரதினத்தையொட்டி, மலைக்கோயிலில் தங்கக் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது பழனிக் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.