முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தங்கத்தோ் புறப்பாடு ரத்து

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெற உள்ள பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் வரும் மாா்ச் 27 ஆம் தேதியும், அதனைத் தொடா்ந்து 28 ஆம் தேதி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தா்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக ஏராளமான பக்தா்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனா். கரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

கரோனா காரணமாக கடந்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் திருவிழாவை நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையா் செந்தில்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் அப்புக்குட்டி, முன்னாள் எம்எல்ஏ., வேணுகோபாலு, சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தங்கத்தோ் புறப்பாடு ரத்து: இந்த விழாவையொட்டி பழனி மலைக்கோயிலில் மாா்ச் 27 ஆம் தேதி முதல் மாா்ச் 30 ஆம் தேதி வரை தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து மாா்ச் 31 ஆம் தேதி முதல் வழக்கம் போல் தங்கத்தோ் புறப்பாடு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.