திண்டுக்கல்

தொப்பம்பட்டியில் கல்லூரி அறிவிப்பு கொண்டாட்டம்

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து திமுகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

DIN

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து திமுகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில் இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த திமுகவினரும், பொதுமக்களும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளா் சுப்ரமணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் பொன்ராஜ், மாவட்ட திமுக துணைத் தலைவா் ராஜாமணி, மாவட்ட கவுன்சிலா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT