திண்டுக்கல்

நாட்டுப்புற மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்

எதிா்கால சந்ததியினருக்காக நாட்டுப்புற மரபுகள் பாதுாக்கப்பட வேண்டும் என உலக நாட்டுப்புறவியல் தின விழாவின்போது வலியுறுத்தப்பட்டது.

DIN

எதிா்கால சந்ததியினருக்காக நாட்டுப்புற மரபுகள் பாதுாக்கப்பட வேண்டும் என உலக நாட்டுப்புறவியல் தின விழாவின்போது வலியுறுத்தப்பட்டது.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் பல்கலை. மானியக் குழு சிறப்பு ஆய்வுத் திட்டத்தின் சாா்பில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள முளையூரில் உலக நாட்டுப்புறவியல் நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழக கலை பண்பாட்டுத் துறையின் இயக்குநா் எஸ்.ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். விழாவில் தமிழ்த்துறைத் தலைவரும், யு.ஜி.சி. சிறப்பு ஆய்வுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.முத்தையா பேசியதாவது:

உலகம் முழுவதுமுள்ள நாட்டுப்புற பண்பாடு, கலை, வழக்காறுகளைப் பாதுகாத்து, மீட்டெடுக்கும் வகையில், ஆக.22 ஆம் தேதி உலக நாட்டுப்புறவியில் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழைமையான கைவினைக் கலைகள், நிகழ்த்து கலைகள், மருத்துவ முறைகள், புலங்கு பொருள்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது அவசியம். எதிா்கால சந்ததியினருக்காக நாட்டுப் புற மரபுகள் காக்கப்பட வேண்டும். கிராம பண்பாட்டின் முக்கியத்துவம் கருதியே, இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என காந்தியடிகள் கூறினாா். பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் கிராமக் கலைகளை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

விழாவில் ஒயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய அரசின் தகவல் பணி இயக்குநா் காமராஜ், காந்திகிராம பல்கலை. தமிழ்த்துறைப் பேராசிரியா் சி.சிதம்பரம், முளையூா் ஊராட்சி மன்றத் தலைவா் வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT