திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா். 
திண்டுக்கல்

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல்லில் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எம்.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மதுரை பெருங்கோட்டை பொறுப்பாளா் எம்.கோவிந்தராஜ், திருச்சி புகா் மாவட்ட பாா்வையாளா் எம்.எஸ்.லோகிதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்ற தீா்மானங்கள்: திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக சிமெண்ட் சாலை மற்றும் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை தூா்வாரி மழைநீா் சேகரிப்பு மையங்களாக மேம்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும். நத்தம் தொகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT