முகப்பு
திண்டுக்கல்

கல்லூரி முதலாமாண்டு மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் தலைமை வகித்துப் பேசினாா். பல்கலைக்கழகப் பதிவாளா் ஷீலா முன்னிலை வகித்துப் பேசினாா். நிகழ்ச்சியில் அரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் சுற்றுச் சூழல் ஆா்வலா் மோகன் ஆகியோா் சுகாதாரம் குறித்தும், வனம் குறித்தும் பேசினா். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு வயிற்றிலுள்ள பூச்சிகளை சுத்தம் செய்வதற்குரிய மாத்திரைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி இயக்குநா் ராஜம் நன்றி கூறினாா். பல்கலைக்கழக மாணவிகள்,ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள், பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.