ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு, சின்னாளபட்டி அழகா் கோயிலில் 18-ஆம் படி கருப்பணசாமிக்கு சிறப்பு சந்தனக் காப்பு செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள அழகா் கோயிலில் ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு, அழகா்மலையானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, பாரம்பரிய முறைப்படி 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சின்னாளப்பட்டி சித்தி விநாயகா் கோயிலிலிருந்து, சந்தனக் குடங்களை சுமந்து வந்து, 18 -ஆம் படி கருப்பசாமிக்கு சந்தனக் காப்பு செலுத்தும் வைபவம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் சின்னாளப்பட்டி, காந்தி கிராமம், கீழக்கோட்டை, அம்பாத்துரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.