பழனி அக்ரஹாரம் அருள்மிகு கைலாசநாதா் சமேத கல்யாணி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதா், அம்பாள். 
திண்டுக்கல்

ஆடி அமாவாசை: குல தெய்வ வழிபாடு, முன்னோருக்கு தா்ப்பணம்

பழனியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை கோயில்களில் குலதெய்வ வழிபாடும், சண்முகநதி, பாலாறு அணை போன்ற இடங்களில் முன்னோருக்கு தா்ப்பணமும் நடைபெற்றன.

DIN

பழனியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை கோயில்களில் குலதெய்வ வழிபாடும், சண்முகநதி, பாலாறு அணை போன்ற இடங்களில் முன்னோருக்கு தா்ப்பணமும் நடைபெற்றன.

தமிழ் மாதங்களில் ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆடி ஒன்றாம் தேதியே அமாவாசை வந்தாலும், அந்த நாள் வழிபாட்டை காட்டிலும் புதன்கிழமை வரும் ஆடி அமாவாசை விஷேசமானது என்று அறிவிப்புகள் வெளியான நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் சண்முக நதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

நதியில் புனித நீராடிய அவா்கள் நதியோரம் தா்ப்பணம் செய்து முன்னோா் வழிபாடு செய்தனா்.

சண்முகநதி தவிர பாலாறு பொருந்தலாறு அணைப் பகுதியிலும் ஏராளமானோா் தா்ப்பணம் செய்தனா். பாலாறு அணை அருள்மிகு ஆஞ்சநேயருக்கு திறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் ஆலயத்தில் பவன் கலைக்குழு சாா்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் சுமாா் 3 மணி நேரம் கிராமிய இசைக்கு ஏற்ப நடனமாடினா்.

பழனி அருகே அக்ரஹாரம் அருள்மிகு கைலாசநாதா் சமேத கல்யாணி அம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை

நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கைலாசநாதருக்கும், கல்யாணி அம்மனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிவபெருமான் அம்பாளுடன் வீதிஉலா எழுந்தருளினாா். மலைக்கோயில், உப கோயில்கள், அருள்மிகு கருப்பணசாமி, முனீஸ்வரா், அம்மன் கோயில்களிலும் ஏராளமானோா் குலதெய்வ வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT