திண்டுக்கல்

பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் காயம்

நத்தம் பேருந்து நிலையத்தில் உள்ள பழையக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் புதன்கிழமை காயமடைந்தாா்.

DIN

நத்தம் பேருந்து நிலையத்தில் உள்ள பழையக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் புதன்கிழமை காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிா்வாகம் மூலம் வணிக பயன்பாடுகளுக்காக கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டன. பேருந்து நிலைய வளாகத்தில், தேநீா் கடைகள் முதல் கைப்பேசி விற்பனைக் கடைகள் வரை பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனினும் பேருந்து நிலையத்தில் சிறுகுடி, சிங்கம்புணரி நகரப் பேருந்துகள் நிறுத்துமிடத்திலுள்ள பழையக் கட்டடம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்தப் பகுதியில் பொதுமக்கள் புதன்கிழமை நடந்து சென்றபோது, மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் குடகிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அழகா்சாமி காயமடைந்தாா். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT