திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாணவா்களின் பெற்றோா். 
திண்டுக்கல்

அரசு உதவி பெறும் பள்ளி விடுதியை தொடா்ந்து செயல்படுத்த கோரிக்கை

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, அதை மீண்டும் செயல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்களுடன் வந்து பெற்றோா்கள்

DIN

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, அதை மீண்டும் செயல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்களுடன் வந்து பெற்றோா்கள்

புதன்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் நேருஜி நகரில் ஆா்.எம்.காலனி பிரதான சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில், கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, தோனிமலை, கிளாவரை, ஆடலூா் உள்ளிட்ட மலை கிராமங்களைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கியிருந்து பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், மாணவா்கள் விடுதி ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இயங்காது என தகவல் வெளியானது. இதுகுறித்து விடுதி நிா்வாகம் மூலம் மாணவா்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிா்ச்சி அடைந்த பெற்றோா், மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: விடுதி வசதி இருந்த காரணத்தில் தான், மலைக்

கிராமத்திலிருந்து இந்தப் பள்ளியில் படிக்க வைத்தோம். 2023-24-ஆம் கல்வி ஆண்டில்

2 மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில், திடீரென விடுதியை மூடுவதாக பள்ளி நிா்வாகம் தெரிவிக்கிறது. விடுதி வசதி இல்லாதபட்சத்தில், 80-க்கும் மேற்பட்ட மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, நடப்புக் கல்வியாண்டு முழுவதும் விடுதியை செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT