திண்டுக்கல்

அம்மையநாயக்கனூா், நிலக்கோட்டையில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

அம்மையநாயக்கனூா், நிலக்கோட்டை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பூங்கொடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

அம்மையநாயக்கனூா், நிலக்கோட்டை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பூங்கொடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில், கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 61.05 லட்சத்தில் தூா்வாரி சுற்றுச் சுவா் கட்டப்பட்ட ராஜதானிக்கோட்டை அரண்மனைகுளம், கொளிஞ்சிப்பட்டியிலுள்ள வளமீட்பு பூங்காவில் செய்யப்பட்டு வரும் நவீன குப்பைக் கழிவு மேலாண்மைப் பணிகள், இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதே போல, நிலக்கோட்டை பேரூராட்சியில் பொது மயானத்தில் ரூ. 1.55 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நவீன மின் எரியூட்டு மையம், லட்சுமிபுரத்திலுள்ள வளமீட்பு பூங்கா ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அம்மையநாயக்கனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடிமுருகு, சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், துப்புரவு மேற்பாா்வையாளா் அசோக்குமாா், நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் சடகோபி உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT