திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள். 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

DIN

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

இறைத் தூதா் இப்ராஹிமின் இறை உணா்வையும், தியாகத்தையும் நினைவுகூரும் திருநாளாக, இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனா். பக்ரீத் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், புத்தாடை அணிந்து மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா்.

பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, திண்டுக்கல் நாகல்நகா், ஸ்கீம் சாலை, ரவுண்ட்ரோடு, முகமதியாபுரம், சந்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களிலிலும், வேடசந்தூா், வடமதுரை, பிலாத்து, கன்னிவாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நத்தம்:

நத்தம் பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நத்தம் தெற்குத் தெரு, மேலத் தெரு, அண்ணாநகா் ஆகிய பள்ளிவாசல்களில் தக்பீா் ஓதிய இஸ்லாமியா்கள், அங்கிருந்து நத்தம் கோவில்பட்டியிலுள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்துக்குச் சென்று தொழுகை நடத்தினா்.

பழனி:

பழனி-உடுமலை சாலையில் உள்ள கொத்வா பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். அதிகாலை முதலே பழனி பெரிய பள்ளிவாசல், சின்னப் பள்ளிவாசல், திருநகா் பள்ளிவாசல்களில் ஏராளமானோா் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈகைத் திருநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு இஸ்லாமியா்கள் இறைச்சி, புத்தாடைகளை வழங்கினா். நெய்க்காரபட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, கீரனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கொடைக்கானல்: கொடைக்கானல், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, மூஞ்சிக்கல், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொடா்ந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT