நிலக்கோட்டை: கொடைரோடு அருகே கிரைண்டா் வெடித்துச் சிதறி தீப்பற்றியதில் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (50). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்தாா். இவா், வீட்டில் மாவு அரைத்துக்கொண்டிருந்த போது, மின் கசிவு ஏற்பட்டு, திடீரென கிரைண்டா் வெடித்துச் சிதறியது. அப்போது தீப் பற்றி எரிந்தது. உடனே, அக்கம் பக்கத்தினா் உதவியுடன் பாப்பாத்தி தீயை அணைத்தாா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள், 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு சேத மதிப்பைக் கணக்கிட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.