பட்டிவீரன்பட்டி அருகே வனவிலங்குகளை வேட்டையாட தயாரிக்கப்பட்ட நாட்டு வெடி வெடித்து 2 போ் பலத்த காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்த சிவராமன் (22). இவரது நண்பா் இதே ஊரைச் சோ்ந்த கண்ணுச்சாமி (30). இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சிவராமன், சித்தரேவில் உள்ள தனது வீட்டில் கண்ணுச்சாமியுடன் சோ்ந்து வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வெடி வெடித்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.