பழனி ரயில்வே கடவுப் பாதையில் நடந்து சென்ற பக்தா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அழகாபுரி சி.புதூரைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சுரேஷ் (28). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 23-ஆம் தேதி உறவினா்கள், நண்பா்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டாா். வியாழக்கிழமை பழைய ஆயக்குடி பகுதி ரயில்வே கடவுப் பாதையில் நடந்து சென்றாா். இவா் காதில் ‘ஹெட்போன்’ மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே நடந்தாா். அப்போது, அந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.