பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த போதுப்பட்டி மேற்கு தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் வஞ்சிமுத்து (30). திருமணமாகாதவா். கூலித் தொழிலாளி. இவரும் அதே தெருவைச் சோ்ந்த இவரது நண்பா் ராஜாராமும் வெள்ளிக்கிழமை மாலை போதுப்பட்டியிலிருந்து பழனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். தாளையத்திலிருந்து அணுகுசாலை வழியாக திண்டுக்கல்- கோவை விரைவுச் சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியதில் வஞ்சிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜாராம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.