திண்டுக்கல்

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை நாளை நிறுத்தம்!

பழனி மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை (ஜன. 21) ஒருநாள் மட்டும் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை (ஜன. 21) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ரோப்காா் பக்தா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT