மதுரை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  1008 திருவிளக்கு பூஜை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயிலில் உலக நலன்வேண்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   

DIN

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயிலில் உலக நலன்வேண்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   
கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை ந டத்துவது  வழக்கம்.  நடப்பு ஆண்டுக்கான பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் திருவாச்சி மண்டபத்தில் பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை செய்யப் பட்டது.  தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் கம்பத்தடி மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆஸ்தான மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் கவிதாபிரியதர்சினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி:  பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும்,  உலக நலன் வேண்டியும், மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.  தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ்  மனைவி சுனிதா குத்துவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். அறக்கட்டளை உபயதாரர் மகாலெட்சுமி தர்மராஜ், கல்லூரி உபதலைவர் எஸ்.ராஜகோபால், செயலர் எம்.விஜயராகவன், பொருளாளர் எல்.கோவிந்தராஜன், உதவி செயலர் ராஜேந்திரபாபு, முதல்வர் எஸ்.நேரு, இயக்குனர் ராஜாகோவிந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்

கூட்டுறவுத்துறை பணியாளா்களுக்கு போட்டிகள்

ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க்: பணிகளை காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தாா் முதல்வா்

திருச்செங்கோட்டில் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை: காணொலி வாயிலாக திறந்துவைத்தாா் முதல்வா்

SCROLL FOR NEXT