மதுரை அருகே பெருங்குடியில் நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் எஸ். நாகரத்தினம் தலைமை வகித்தார். தாளாளர் கே. பழனி வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார்.
விழாவில், கல்லூரி கட்டடத்தை திறந்துவைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். இதில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஏ.ஜி. பொன். மாணிக்கவேல், காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே. முத்துச்செழியன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, சரசுவதி நாராயணன் கல்லூரி முதல்வர் மு. கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, கல்லூரியின் அறங்காவலரும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவருமான என். ஜெகதீசன் வரவேற்றார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.